நபி ﷺ அவர்களுக்கு, அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் முழு வருடமும் தொடராக நோன்பு நோற்று, இரவு முழுவதும் தூங்காமல் தொழுவதாக செய்தி எட்டியது. அதனால் நபி ﷺ அவர்கள் அவரை அதிலிருந்து தடுத்தார்கள்; மேலும் அவரிடம்: '(சில நாட்கள்), நோன்பு நோற்றுக்கொள்வீராக மற்றும் சில நாட்கள் நோன்பு நோற்காதிருப்பீராக. இரவில் தொழவும், தூங்கவும் செய்வீராக' என்று கூறினார்கள். இடைவிடாது நோன்பு நோற்பதையும், இரவு முழுவதும் தொழுவதையும் அவர் தடை செய்தார்கள். மேலும் கூறினார்கள்: 'நீ இதைச் செய்தால், உன் கண்கள் பலவீனமடைந்து உள்ளே சென்று விடும்; உன் உடலும் சோர்வடைந்து, உன் உயிர்சக்தி குன்றி, நீ களைப்புற்று சோர்ந்து போவாய். ஆகவே, ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றவன் உண்மையில் நோன்பு நோற்றவனாக இல்லை'. ஏனெனில், தடை செய்யப்பட்ட முறையை மீறியதாலும் நோன்பை விடாது நோற்றதினாலும் அவனுக்கு நோன்பின் கூலி கிடைக்கவில்லை. பின்னர் நபி ﷺ அவர்கள் அவரை வழிப்படுத்தி, 'ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றதற்குச் சமம்' என்று கூறினார்கள். ஏனெனில், ஒவ்வொரு நற்காரியத்திற்கும் பத்து மடங்கு நன்மை வழங்கப்படுகிறது. இது நன்மையின் பெருக்கத்தின் குறைந்த அளவாகும். அதற்கு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள்: 'நான் அதைவிட அதிகமாகச் செய்யும் திறன் கொண்டவன்' என்று கூறினார். அப்போது நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: 'அப்படியானால், தாவூத் (அலை) அவர்களின் நோன்பு முறையைப் பின்பற்றுவீராக அது நோன்புகளில் சிறந்தது. அவர் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் நோன்பை விடுவார். மேலும், எதிரியைச் சந்தித்தபோது அவர் ஒருபோதும் பின்வாங்கியதில்லை'. ஏனெனில், அவருடைய நோன்பு முறை அவரது உடலை பலவீனப்படுத்தவில்லை. இடைவிடாது நோன்பு நோற்பதையும், இரவு முழுவதும் தொழுவதையும் அவர் தடை செய்தார்கள். மேலும் கூறினார்கள்: 'நீ இதைச் செய்தால், உன் கண்கள் பலவீனமடைந்து உள்ளே சென்று விடும்; உன் உடலும் சோர்வடைந்து, உன் உயிர்சக்தி குன்றி, நீ களைப்புற்று சோர்ந்து போவாய். ஆகவே, ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றவன் உண்மையில் நோன்பு நோற்றவனாக இல்லை'. ஏனெனில், தடை செய்யப்பட்ட முறையை மீறியதாலும் நோன்பை விடாது நோற்றதினாலும் அவனுக்கு நோன்பின் கூலி கிடைக்கவில்லை. பின்னர் நபி ﷺ அவர்கள் அவரை வழிப்படுத்தி, 'ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றதற்குச் சமம்' என்று கூறினார்கள். ஏனெனில், ஒவ்வொரு நற்காரியத்திற்கும் பத்து மடங்கு நன்மை வழங்கப்படுகிறது. இது நன்மையின் பெருக்கத்தின் குறைந்த அளவாகும். அதற்கு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள்: 'நான் அதைவிட அதிகமாகச் செய்யும் திறன் கொண்டவன்' என்று கூறினார். அப்போது நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: 'அப்படியானால், தாவூத் (அலை) அவர்களின் நோன்பு முறையைப் பின்பற்றுவீராக. அது நோன்புகளில் சிறந்தது. அவர் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் நோன்பை விடுவார். மேலும், எதிரியைச் சந்தித்தபோது அவர் ஒருபோதும் பின்வாங்கியதில்லை'. ஏனெனில், அவருடைய நோன்பு முறை அவரது உடலை பலவீனப் படுத்தவில்லை.