மஸ்ஜிதிற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் ஓத வேண்டிய துஆவை தனது சமூகத்திற்கு கற்றுக்கொடுத்து வழிப்படுத்தினார்கள். பள்ளியினுள் நுழையும் போது அல்லாஹும்மப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக' என்று கூற வேண்டும் அதாவது அல்லாஹ்வின் கருணையை பெற்றுக்கொள்ளக் கூடிய வழிகளை தயார்படுத்தித் தருமாறு அல்லாஹ்விடம் அடியான் வேண்டுகிறான். மஸ்ஜிதிலிருந்து வெளியேறும் போது : 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக' என்ற துஆவை ஓத வேண்டும். இதன் கருத்து அடியான் ஹலாலான வாழ்வாதாரத்தை அல்லாஹ்வின் அருட்கொடையிலிருந்து தருமாறு வேண்டுகிறான்.