இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அவர்கள் யார் வுழு செய்து அதன் அர்கான்கள் மற்றும் சுன்னாக்கள் ஒழுக்கங்களை பேணி சீராகவும் அழகிய முறையிலும் செய்து, பின் ஜுமுஆத் தொழுகைக்காக வந்து இமாமின் உரையை ஈடுபாட்டுடன் மௌனமாக செவிதாழ்த்திக் கேட்பதோடு வீணான பேச்சுக்களை பேசாது மௌனமாக இருப்பவரின் பத்து நாட்களுக்கான சிறு பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ஏனெனில் ஒரு நன்மையென்பது அது போன்று பத்து மடங்காகும். என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள் . குத்பாவில் கூறப்படும் அறிவுரைக்கு முக்கியத்துவம் கொடுக்காது பொடிக்கற்களால் விளையாடுதல் போன்ற சிந்தனை திசைத் திருப்பும்; வீணான செயல்களில் ஈடுபடுவதானது ஜுமுஆவின் பூரணகூலியைப் பெற்றுக் கொள்வதில் தடையாக இருப்பதோடு, அதற்கான அதிஷ்டமும் கைநழுவிவிடும்.