அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : இரவிலிருந்து காலை வரை உறங்கிய ஒரு மனிதரைப் பற்றி நபியவர்களிடம் கூறப்பட்ட போது, "அம்மனிதனின் இரு காதுகளிலும் (அல்லது ஒரு காதில்) ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்." என்று கூறினார்கள். சரியானது - இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

இரவிலிருந்து சூரியன் உதித்து காலையாகும் வரை உறங்கி, கடமையான தொழுகைக்கு எழுந்துசெல்லாத ஒரு மனிதரைப் பற்றி நபியவர்களிடம் கூறப்பட்ட போது, "அம்மனிதனின் காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்." என்று கூறினார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • இரவுத் தொழுகையை விடுவது வெறுக்கப்பட்டதாகும். ஷைத்தானின் காரணமாகவே அவ்வாறு நிகழுகின்றது.
  • எல்லாப் பாதைகளிலும் அமர்ந்துகொண்டு, மனிதன் அல்லாஹ்வுக்கு வழிப்படத் தடையாக இருக்கும் ஷைத்தானை விட்டும் எச்சரிக்கையாக இருத்தல்.
  • இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகின்றார்கள்: “தொழுகைக்கு எழுந்துசெல்லாத” என்பதன் அர்த்தம், பொதுவாக அனைத்து இரவுத் தொழுகைகளுமாக அல்லது குறித்த கடமையான தொழுகையாக இருக்கலாம்.
  • தீபீ (ரஹ்) இவ்வாறு கூறுகின்றார்கள்: தூக்கம் என்று வரும் போது கண் கூறப்படுவது பொருத்தமாக இருந்தும், காது கூறப்பட்டதன் நோக்கம், ஆழ்ந்த உறக்கத்தைக் குறிக்கவாகும். ஏனெனில் செவியே விழிப்புணர்வைத் தருகின்றது. சிறுநீர் குறிப்பிடப்படக் காரணம், வெற்று இடங்களில் இலகுவாக அதுவே நுழையும். நரம்புகளில் வேகமாக உட்சென்று விடும். அதன் மூலம் உடல்களில் எல்லாம் அது சோம்பலை ஏற்படுத்தும்.