நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காக கழிவறைக்குள் நுழையும்போது அல்லாஹ்விடம் ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கை விட்டும் பாது காக்குமாறு கோருவார்கள். ஹதீஸில் குறிப்பிடப்பட்ட அல்குப்ஸ்,அல்கபாஇஸ் என்பது தீங்கு மற்றும் அசுத்தம் எனவும் பொருள் கோடல் செய்யப்பட்டுள்ளது.