ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்கு(ம் குச்சியால் தமது வாயைக் கழுவி சுத்தம் செய்)வார்கள். சரியானது - இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதிகம் மிஸ்வாக் செய்பவர்களாகவும் அதனை வலியுறுத்துபவர்களாகவும் இருந்தார்கள். பல்துலக்குவது –மிஸ்வாக் செய்வது- சில வேளைகளில் வலியுறுத்தப்பட்ட விடயமாகும் அவற்றில் : இரவில் தூங்கி எழும்பினால் பல்துலக்குவது. அந்த நேரத்தில் நபியவர்கள் அராக் குச்சியால் -மிஸ்வாக்- பல்லை துலக்கி சுத்தம் செய்பவர்களாக இருந்தார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • இரவில் தூங்கி எழும்பிய பின் மிஸ்வாக்- பல்துலக்குவது மார்க்கரீதீயாக வலியுறுத்தப்பட்ட விடயமாகும். காரணம் தூக்கம் வாயின் வாடையை மாற்றுகிறது. மிஸ்வாக் பற்களைச் சுத்தம் செய்ய பயன்படும் ஒரு சாதனமாகும். (நபியவர்கள் பற்தூரிகையாக அராக் மரத்தின் குச்சியைப் பயன்படுத்தினார்கள்).
  • மேலே குறிப்பிட்ட கருத்தின் பின்னணியில் வாய் துர்நாற்றம் ஏற்படும் போதெல்லாம் பல் துலக்குவது மார்க்கரீதியாக வலியுறுத்தப்பட்டிருத்தல்.
  • பொதுவாக சுத்தமாக இருப்பது மார்க்கத்தில் வலியுறத்தப்பட்ட ஒரு விடயமாகும். இது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிமுறையாகவும் உயர் ஒழுக்கப்பண்புகளில் ஒன்றாகவும் காணப்படுகிறது.
  • முழுமையாக பல்துலக்குவது என்பது பற்கள், ஈறுகள், நாக்கு போன்றவற்றை குறிக்கும்
  • ஸிவாக் என்பது அராக் அல்லது வேறு மரங்களிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட ஒரு குச்சி. இது பற்கள் மற்றும் வாயை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும், இதனால் வாய் நறுமணம் பெறுவதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கிவிடுகிறது.