ஷுரைஹ் பின் ஹானி அவர்கள் கூறுகின்றார்கள்: நான் ஆஇஷா (ரழி) அவர்களிடம், “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வீட்டினுள் நுழைந்ததும் முதலில் என்ன செய்வார்கள்?" எனக் கேட்டதற்கு, "பல் துலக்குவார்கள்" என்றார்கள் அவர்கள். சரியானது - இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
explain-icon

விளக்கம்

நபி (ஸல்) அவர்கள் வீட்டினுள், இரவிலோ, பகலிலோ எந்த நேரத்தில் நுழைந்தாலும் முதலாவதாக பற்களை சுத்தப்படுத்துவது அவர்களது வழிமுறையாக இருந்தது.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • பொதுவாக எல்லா நேரங்களிலும் பல் துலக்குவது மார்க்கமாகும். அதிலும் குறிப்பாக மார்க்கம் அடையாளப்படுத்தியுள்ள நேரங்களில் செய்வது முக்கியமாகும். உதாரணமாக, வீட்டில் நுழையும் போது, தொழுகையின் போது, வுழூவின் போது, தூங்கி எழுந்ததும், வாயில் துர்வாடை வரும் போது.
  • தாபிஈன்கள் நபி (ஸல்) அவர்களது நிலைமைகள் பற்றிக் கேட்டறிந்து, அவற்றைப் பின்பற்ற ஆர்வம் காட்டியுள்ளமை.
  • தகுதியானவர்களிடமிருந்தும், நன்கு அறிந்தவர்களிடமிருந்தும் அறிவைப் பெறல். அதாவது, நபியவர்கள் வீட்டினுள் நுழையும் போது என்ன செய்வார்கள் என ஆஇஷா (ரலி) அவர்களிடம் வினவப்படுகின்றது.
  • நபியவர்கள் வீட்டினுள் நுழைந்தவுடன் பற்களைத் துலக்கியதன் மூலம், தமது மனைவியருடன் நல்லமுறையில் நடந்துகொண்டுள்ளார்கள்.