நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : "இயற்கை மரபுகள் ஐந்தாகும் : விருத்தசேதனம் (கத்னா) செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைவது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது, நகங்களை வெட்டிக் கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியனவாகும்''. சரியானது - இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலும் மற்றும் நபிமார்களின் மரபுகளிலும் உள்ள ஐந்து விடயங்களை தெளிவுபடுத்துகிறார்கள்; அவை பின்வருமாறு : முதலாவது : விருத்த சேதனம்; விருத்தசேதனம் என்பது ஆணுறுப்பின் மேல் பகுதியில் உள்ள தோலை கத்தரிவிடுதல். பெண் பிறப்புறுப்பில் உறவு கொள்ளும் இடத்திற்கு மேலே உள்ள பகுதியை நீக்கி விடுதல். இரண்டாவது: மர்ம உறுப்பின் மேலே உள்ள பகுதியில் காணப்படும் முடிகளை மழித்தல். மூன்றாவது: மீசையை கத்தரித்தல் -ஒட்ட வெட்டுதல்- அதாவது ஆணின் உதட்டின் மேல் பகுதி தெரியுமளவிற்கு மேல் உதட்டுப்பக்கத்தில் வளரும் முடிகளை கத்தரிப்பதை குறிக்கிறது. நான்காவது : நகங்களை களைதல். ஐந்தாவது :அக்குள் முடிகளை களைதல்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • அல்லாஹ்வின் தூதர்களின் இயற்கை மரபுகளை -வழிமுறைகளை அல்லாஹ் விரும்பி வரவேற்போதோடு அவற்றை கடைப்பிடித்து ஒழுகுமாறும் கட்டளையிடுகிறான். அவை யாவும் முழுமை, தூய்மை, அழகு போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது.
  • இயற்கை மரபுகளில் அலட்சியம் கொள்ளாது பேணிநடப்பது மார்க்கம் வழிகாட்டிய விடயமாகும்.
  • இவ்விடயங்களைக் கடைபிடிப்பதால் பலவிதமான ஆன்மீக, லௌகீக பயன்பாடுகள் உள்ளன. அழகிய தோற்றம், உடற்சுத்தம், ஆன்மீக சுத்தத்திற்கான பேணுதல், நிராகரிப்பாளர்களின் கலாச்சாரத்திற்கு மாறுசெய்தல், இறைக்கட்டளையை எடுத்து நடத்தல் போன்றன அவற்றுள் சிலதாகும்.
  • வேறு அறிவிப்புகளில் -ஹதீஸ்களில்- இங்கே குறிப்பிடப்பட்ட ஐந்து விடயங்களுக்கு மேலதிகமாக தாடி வளர்த்தல், மிஸ்வாக் செய்தல் போன்ற இவை அல்லாத பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.