நபியவர்களின் காலத்திற்கு பிறகு, தனது சமூகத்தில் சிலரின் நிலை குறித்து நபிகளார் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். அதாவது தனது சமூகத்தாரில் சிலர் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை தமது நம்பிக்கைக் கோட்பாடுகளிலும் செயற்பாடுகளிலும் வழக்காறுகளிலும் பாரம்பரிய விடயங்களிலும் மிகவும் துல்லியமாக சாணுக்குச் சாண் முழத்திற்கு முழம் பின்பற்றி நடப்பார்கள். இந்நிலையை அவர்கள் விளக்கும் போது அந்த யூதர்களும் கிறிஸ்தவர்களும் உடும்பின் பொந்தினுள் நுழைந்தாலும் இவர்களும் அவர்களைப் பின்தொடர்ந்து அவ்வேளையைச் செய்வார்கள் எனக் குறிப்பிடுகிறார்கள்.