நபி (ஸல்) அவர்கள், பெண்களுக்கே உரிய ஆடைகளை அணிந்து பெண்களைப் போல் ஒத்திருக்கும் ஒவ்வொரு ஆண் மீதும் அவர்கள் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாக்கப்பட வேண்டி துஆ செய்தார்கள். அணியும் ஆடையானது வடிவம், நிறம், அணியும் முறை, அலங்காரம் அல்லது வேறு எந்த விதத்திலாயினும் பெண்களைப் போல் ஒத்திருப்பின் இந்த நபியவர்களின் சாபத்திற்கு உள்ளாகுவார். அதுபோலவே, ஆண்களுக்கே உரிய ஆடைகளை அணிந்து ஆண்களைப் போல் ஒத்திருக்கும் பெண் மீதும் இதே எச்சரிக்கை உள்ளது. இது பெரிய பாவங்களில் ஒன்றாகும்.