ஒரு முஸ்லிம் தனது உள்ளத்தில் வரும் தீய எண்ணங்களுக்கு, அவர் அவற்றைச் செயல்படுத்தும் வரை அல்லது அவற்றை வெளிப்படுத்தும் வரை –(அது குறித்து பேசும் வரை) குற்றம் பிடிக்கப்படமாட்டார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் விளக்குகிறார்கள். ஏனென்றால் சிரமத்தை நீக்குதல் அடிப்படையில் அத்தகைய எண்ணங்களை அல்லாஹ் மன்னிக்கிறான். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சமூகத்தாரின் மனங்களிலும் இதயங்களிலும் தோன்றி மறையும் எண்ணங்களுக்கு அவை மனதில் நிலையாக குடிகொண்டாலே தவிர குற்றம் பிடிக்கப்பட மாட்டாது . ஆணவம், கர்வம், நயவஞ்சகத்தனம் போன்ற கெட்ட எண்ணங்கள் எவனுடைய உள்ளத்தில் நிலைகொண்டு, உள்ளம் அவற்றால் திருப்தி காணும் அளவிற்கு அவற்றுக்கு இடமளிக்கிறானோ, அல்லது தன் உறுப்புகளினால் அவற்றைச் செய்கிறானோ அல்லது தன் நாவால் அவற்றை வெளிப்படுத்துகிறானோ அவன் குற்றம் பிடிக்கப்படுவான் என்கிறது இந்த ஹதீஸ்.