திருமணத்திற்குப் பிறகு, ஒருவரின் பார்வையும் அந்தரங்க உறுப்புகளும் தடைசெய்யப்பட்ட விஷயங்களிலிருந்து பாதுகாக்கப்படும், மேலும் ஒழுக்கக்கேடான செயல்களில் விழும் வாய்ப்புகள் குறையும் என்பதால், நபி (ஸல்) அவர்கள், உடலுறவில் ஈடுபடுவதற்குரிய சக்தியையும், திருமணத்திற்குரிய வசதிகளையும் பெற்ற அனைவரையும் திருமணம் செய்து கொள்ளுமாறு ஊக்குவித்தார்கள். உடலுறவு கொள்ளும் சக்தி இருந்தும், திருமணச் செலவுகளுக்கான வசதி ஒருவருக்கு இல்லை என்றால், அவர் நோன்பு நோற்க வேண்டும், ஏனெனில் நோன்பானது காமத்தைக் குறைக்க உதவுகிறது.