அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : சுவர்க்கத்தில் உங்களில் ஒருவரின் ஆகக் குறைந்த இடம் யாதெனில், அல்லாஹ் அவனிடம் உனக்கு எவ்வளவு இடம் வேண்டுமென விரும்புகிறாய்? என்பான்.அவன் விரும்பிய பின்,அவனிடம் அல்லாஹ் நீ விரும்பினாயா?என்று கேட்பான். அதற்கு அவன் ஆம் என்று கூறியதும், அல்லாஹ் நீ விரும்பியதும் அது போன்றதும் உனக்குரியது என்று கூறுவான். சரியானது - இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
explain-icon

விளக்கம்

இங்கு நபியவர்கள் அறிவிப்பதாவது, சுவர்க்கத்தில் நுழையும் ஒருவரின் ஆகக் குறைந்த இடம் யாதெனில், அல்லாஹ் அவனிடம், உனக்கு எவ்வளவு இடம் வேண்டுமென விரும்புகிறாய்? என்பான். அவன் விரும்பிய பின், அவனிடம் அல்லாஹ் நீ விரும்பினாயா? என்று கேட்பான். அதற்கு அவன் ஆம் என்று கூறியதும், அல்லாஹ் நீ விரும்பியதும் அது போன்றதும் உனக்குரியது என்று கூறுவான்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • சுவனவாதிகளின் அந்தஸ்த்துக்களில் ஏற்றத்தாழ்வு உள்ளமை.
  • அல்லாஹ்வின் மகத்தான பெருந்தன்மையை தெளிவுபடுத்தல்.
  • சுவன இன்பங்கள் குறித்த ஒன்றில் மாத்திரம் சுருங்கி விடாது. மாறாக, ஒரு விசுவாசி தான் விருப்பப்படும், ஆசைப்படும் அனைத்தையும் அல்லாஹ்வின் பேருபகாரம் மற்றும் பெருந்தன்மை காரணமாக பெற்றுக் கொள்வான்.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு