யார் ஒருவர் சொல் மற்றும் செயலின் மூலம் சத்தியமும் நன்மையும் நிறைந்த ஒரு வழிக்கு மக்களை வழிப்படுத்துகிறோரோ அவருக்கு அந்த நல்லவிடயத்தை பின்பற்றி நடப்போருக்கு கிடைக்கும் நன்மை-கூலி- கிடைக்கும். இதனால் அந்த நல்ல விடயத்தைப் பின்பற்றி நடப்பவரின் நன்மையில் எதுவும் குறைக்கப்படமாட்டாது என நபியவர்கள் கூறினார்கள். யார் ஒருவர் சொல் மற்றும் செயலின் மூலம் பாவமும் தவறும் அல்லாஹ் அனுமதிக்காத விடயங்கள் நிறைந்த அசத்திய வழியின் பால் அழைத்தால் அவரைப் பின்பற்றியவர்களுக்கு கிடைக்கும் பாவம் அவருக்கும் கிடைக்கும்.அதில் அவரைப்பின்பபற்றியவர்களின் பாவங்களில் ஏதும் குறைக்க்படமாட்டாது.