உம்முல் முஃமினீன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், தமது சிறுநாக்குத் தென்படும் அளவு வாயைத் திறந்து பலமாக சிரித்ததை நான் கண்டதில்லை. மாறாக, புன்முறுவலாகவே சிரிப்பார்கள். சரியானது - இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

சிறுநாக்கு (தொண்டையின் மேற்பகுதியில் உள்ள சதைத் துண்டு) தென்படும் அளவு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அளவுகடந்து சிரிக்கமாட்டார்கள் எனவும், புன்முறுவலாகவே சிரிப்பார்கள் எனவும் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏதாவதொன்றைப் பொருந்திக்கொண்டாலோ, அல்லது அது அவர்களை மகிழ்ச்சிப்படுத்தினாலோ புன்முறுவலாகவே சிரிப்பார்கள்.
  • இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : நபியவர்கள் பலமாக சிரிக்கமாட்டார்கள் என்பதன் அர்த்தம், முழுமையாக சிரிப்பிலேயே ஆழ்ந்து சிரிக்கமாட்டார்கள் என்பதாகும்.
  • அதிகமாக சிரிப்பதும், வெடிச்சிரிப்பு போன்று சப்தத்தை உயர்த்துவதும் நல்லடியார்களின் பண்புகள் அல்ல.
  • ஒரு மனிதனின் மிதமிஞ்சிய சிரிப்பு, தனது சகோதரர்களிடம் அவனுக்குள்ள மதிப்பு மற்றும் மரியாதையை இல்லாமலாக்கிவிடும்.
explain-icon

பிரிவுகள்

explain-icon

மேலதிக விபரங்களுக்கு