நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நற்குணங்களைப் பரிபூரணப்படுத்தவே நான் அனுப்பப்பட்டுள்ளேன் நம்பகமானது (ஹஸன்) - இதை இமாம் புஹாரி அவர்கள் ‘அல்அதப் அல்முப்ரத்’ எனும் நூலிலும், இமாம்களான அஹ்மத், பைஹகீ ஆகியோரும் பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

இங்கு நபியவர்கள், தம்மை அல்லாஹ் சிறப்பான நற்குணங்களைப் பரிபூரணப்படுத்துவதற்காகவே அனுப்பிவைத்தான் என அறிவிக்கின்றார்கள். அதாவது, நபியவர்கள், முன்சென்ற நபிமார்களை (அவர்களது போதனைகளை) முழுமைப்படுத்தும் விதமாகவும், அரபிகளின் நற்குணங்களைப் பரிபூணரப்படுத்தும் விதமாகவும் அனுப்பி வைக்கப் பட்டார்கள். அவர்கள் நன்மையை விரும்புபவர்களா கவும், தீமையை வெறுப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் சுயகௌரவமும், பெருந் தன்மையும், தயாளகுணமும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் இருந்த குறைகளான, குடும்பங்களை வைத்துப் பெருமை பேசுதல், பெருமையடித்தல், ஏழையை இழிவாகக் கருதுதல் போன்றவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக நபியவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • நற்குணங்களில் ஆர்வமூட்டல், தீயகுணங்களைத் தடுத்தல்.
  • இஸ்லாத்தில் நற்குணங்களுக்கு உள்ள முக்கியத்துவத்தையும், அவை இஸ்லாத்தில் முன்னுரிமைப்படுத்தப்படுபவையாக இருப்பதையும் தெளிவுபடுத்தல்
  • ஜாஹிலிய்யா மக்களிடம் நற்குணங்களின் எச்சங்கள் காணப்பட்டன. தயாளகுணம், வீரம் போன்றவை அவற்றுள் சிலவாகும். இஸ்லாம் வந்து, அவற்றைப் பரிபூரணப்படுத்தியது.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு