மிகுந்த பதட்டம் மற்றும் துக்கத்தின் போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவார்கள்: 'லா இலாஹ இல்லல்லாஹ்': அல்லாஹ்வைத் தவிர வேறு உண்மையான கடவுள் இல்லை. 'அல்-அளீம்': என்பது தனது தாத் (மெய்நிலை) மற்றும் பண்புகளிலும் செயல்களிலும் (உயர்ந்த அந்தஸ்தையும் மகத்துவத்தையும் பெற்றவனாவான். 'அல்-ஹலீம்' : என்பது பாவியை உடனடியாகத் தண்டிக்காமல், மாறாக அதைத் தாமதப்படுத்தி, தனக்கு அவனை தண்டிப்பதற்கான சக்தி இருந்து, எல்லாவற்றின் மீதும் வல்லமைப் படைத்தாவனாக இருக்கும் அவன் அவனை மன்னிப்பவன் என்பது பொருளாகும் . 'லா இலாஹ இல்லல்லாஹ் ரப்புல்-அர்ஷில்-அலீம்' : அதாவது அவனே மகத்தான சிம்மாசனத்தை படைத்தவன்; 'லா இலாஹ இல்லல்லாஹ் ரபபுஸ் ஸமாவாதி வல் அர்ழி' : வானங்களையும் பூமியையும் படைத்தவன் அல்லாஹ் மட்டுமே, மேலும் அவற்றுக்கிடையே உள்ளவற்றைப் படைத்தவன், அதன் உரிமையாளன் சீர்படுத்துபத்துபவன் மற்றும் தான் விரும்புவதைக் செய்பவன் என்பது இதன் கருத்தாகும் 'ரப்புல் அர்ஷில் கரீம்' என்பது: சிறப்பான சிம்மாசனத்தைப் படைத்தவன் என்பதைக் குறிக்கும்.