அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உக்பத் இப்னு ஆமிர் அல்ஜுஹனி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்குர்ஆனை சப்தமிட்டு ஓதுபவர் தர்மத்தை பகிரங்கமாக செய்பவர் போலாவார் மேலும் அல்குர்ஆனை இரகசியமாக ஓதுபவர் இரகசியமாக தர்மம் செய்தவர் போலாவார் சரியானது - இமாம்களான அபூதாவுத், திர்மிதி மற்றும் நஸாஈ ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்
explain-icon

விளக்கம்

அல்குர்ஆனை சப்தமிட்டு ஓதுபவர் தர்மத்தை பகிரங்கமாக செய்பவர் போலாவார். மேலும் அல்குர்ஆனை இரகசியமாக ஓதுபவர் இரகசியமாக தர்மம் செய்தவர் போலாவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • தர்மத்தை இரகசியமாக மறைத்து வழங்குவது மிகவும் சிறப்பானதாக இருப்பது போன்று அல் குர்ஆனை இரகசியமாக ஓதுவது மிகவும் சிறப்பானதாகும்.இவ்வாறு செய்வதில் இஹ்லாஸ் உளத்தூய்மை பேணப்படுவதோடு; முகஸ்துதி மற்றும் தற்பெருமையிலிருந்து விலகிக்கொள்ளவும் வாய்ப்பாக அமையும்.அல்குர்ஆனை கற்பித்தல் போன்ற தேவைக்காக சப்பதமாக ஓதுவது அனுமதிக்கப்பட்டதாகும்.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு