நபியவர்கள் இங்கு சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள் : யா அல்லாஹ்! கடன் சுமையை (அது என்னை மிகைப்பதையும், அதன் கவலை மற்றும் சோதனைகளையும்) விட்டும் நான் (வேறு யாரிடமும் இல்லாமல்) உன்னிடம் (ஒதுங்கிப்) பாதுகாப்புத் தேடுகின்றேன். அவற்றைத் திருப்பிச் செலுத்திவிட உதவுமாறு நான் உன்னிடம் கேட்கின்றேன். இரண்டாவது : 'எதிரியின் அடக்குமுறையை விட்டும்' (அதாவது, எதிரி என்னை அடக்கி, ஆதிக்கம் செலுத்துவதை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். அவனுடைய தொல்லைகளைத் தடுத்து, அவனை வெற்றிகொள்ள உதவுமாறு உன்னிடம் கேட்கின்றேன்.) மூன்றாவது : 'எதிரிகளின் நகைப்பு' அதாவது, முஸ்லிம்களுக்கு ஏற்படும் சோதனைகள் மற்றும் துன்பங்களில் அவர்கள் மகிழ்ச்சியடைவது.