ஒரு முஸ்லிம் அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் கொண்ட நிலையிலேயே மரணிக்க வேண்டும் என நபியவர்கள் இங்கு வலியுறுத்துகின்றார்கள். அதாவது, மரணத் தருவாயில், அல்லாஹ் தன்னை மன்னித்து அருள் புரிவான் என்ற நல்ல எதிர்பார்ப்பை அவர் கூடுதலாக வைக்க வேண்டும். ஏனெனில், இறைவன் பற்றிய பயம் என்பது அமல்களை சிறப்பாகச் செய்வதற்கு அவசியமானது. ஆனால், இது அமல்களுக்கு உரிய நிலைமை அல்ல. இங்கு எதிர்பார்க்கப்படுவது அருளை ஆதரவு வைப்பதே!