இங்கு நபியவர்கள் அறிவிப்பதாவது, பாங்கு சொல்வதிலும், முதல் ஸப்பிலும் உள்ள சிறப்பையும், நன்மையையும், பரகத்தையும் மக்கள் அறிந்து கொள்வார்கள் என்றால், சீட்டுக் குழுக்கித் தான் அதற்காக முந்திக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் அதையும் அவர்கள் செய்வார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப நேரத்திலேயே செல்வதன் சிறப்பை அவர்கள் அறிவார்கள் என்றால், அதற்காக போட்டி போட்டுக் கொள்வார்கள். மேலும், இஷாத் தொழுகையிலும், பஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையின் அளவை அவர்கள் அறிவார்கள் என்றால், ஒரு குழந்தை ஆரம்ப கட்டங்களில் முழங்காலால் தவன்று செல்வது போன்று, தவன்றாவது அதற்கு வருவார்கள்.