நபி முஹம்மது ﷺ அவர்கள், ஒரு முஸ்லிமின் உரிமையை பறிப்பதற்காக தனக்கு சொந்தமில்லை என்பதை தெளிவாக அறிந்த நிலையில்; அல்லாஹ்வின் பெயரில் பொய்யாக சத்தியம் செய்வதை கடுமையாக எச்சரித்தார்கள். அத்தகைய செயலுக்கான தண்டனை நரகமாகும். சுவர்க்கம் மறுக்கப்படும்; இது பெரும் பாவங்களில் ஒன்றாகும். ஒரு மனிதர்: 'அல்லாஹ்வின் தூதரே சத்தியம் செய்து பறிக்கப்படும் பொருள் மிகவும் சிறியதாக இருந்தாலுமா ? என் கேட்டார். அதற்கு நபி ﷺ அவர்கள்: 'அது அராக் மரத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு சிறிய மிஸ்வாக் குச்சியாக இருந்தாலும் கூட' என்று பதில் கூறினார்கள்.