நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹஜ் அல்லது உம்ரா கிரியையை செய்ய நுழைந்து விட்டால் பின்வருமாறு தல்பியா கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்: (لبيك اللهم لبيك) (லெப்பக்கல்லாஹும்;ம லெப்பைக் (கருத்து விளக்கம்) : யா அல்லாஹ்! நேர்மை, ஏகத்துவம் மற்றும் ஹஜ் போன்றவற்றில் உனது அழைப்பினை ஏற்று இதோ நாம் வந்து விட்டோம்;. (لبيك لا شريك لك لبيك) லெப்பைக் லா ஷரீக லக லெப்பைக் (கருத்து விளக்கம்) ஏனென்றால், நீ மட்டுமே வணக்கத்திற்கு மிகவும் தகுதியானவன்;. உனது இரட்சித்தல் விவகாரத்திலும் மற்றும் வணக்கத்திற்கு தகுதியானவன் என்ற விடயத்திலும், மற்றும் உன் பெயர்கள் பண்புகளிலும் உனக்கு நிகரானவர் எவரும்; இல்லை. (إن الحمد) (இன்னல் ஹம்த) உண்மையில், பாராட்டும், நன்றியும்;, புகழும் உனக்குரியது. (والنعمة) (வன்னிஃமத) அருள்கள் யாவும் உன்னிடமிருந்தே வருகின்றன, நீயே அவற்றை வழங்குகிறாய். (لك) (லக) இவை யாவும் எல்லா நிலைகளிலும்; உனக்காகவே செலுத்தப் படும். (والملك) (வல் முல்க்) ஆட்சி அதிகாரமும் உன்னுடையது. (لا شريك لك) (லாஷரீகலக) உனக்கு அதில் எந்த துணையும் இல்லை. எனவே, இவை அனைத்தும் உனக்காக மட்டுமே செலுத்தப்படும். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் இந்த தல்பியாவில் பின்வரும் வார்த்தைகளைச் சேர்த்துக் கூறுபவர்களாக இருந்தார்கள். (لبيك لبيك وسعديك) லெப்பைக்க லெப்பைக்க வஸஃதைக்க (உன் அழைப்புக்கு நான் பதிலளிக்கிறேன், உன் அழைப்புக்கு நான் மீண்டும் மீண்டும் பதிலளிக்கிறேன், என்னை மகிழ்விக்குமாறு நான் உன்னிடம் கேட்டுக்கொள்கிறேன்) கருத்து: எல்லா நேரங்களிலும் இந்த மகிழ்ச்சியை மீண்டும் மீண்டும் வழங்குவாயாக! (والخير بيديك).'வல் கைரு பியதைக்க' (எல்லா நன்மைகளும் உன் கைகளில் உள்ளன) பொருள்: எல்லா நன்மைகளும் உன்னுடையது, அது உன் அருளால் தான் கிடைக்கப்பெறுகிறது (لبيك والرغباء إليك) லெப்பைக்க வர்ரஃபாஉ இலைக்க' (நான் உன் அழைப்புக்கு பதிலளிக்கிறேன், என் நம்பிக்கைகள் உன்னை நோக்கியே உள்ளன) பொருள்: எங்கள் நம்பிக்கைகள், எங்கள் ஆசைகள், எங்கள் தேவைகள் அனைத்தும் உன்கைவசம் உள்ளது அவற்றை நீ மட்டுமே நிறைவேற்ற முடியும். (والعمل) 'வல்அமல்' (மற்றும் செயல்கள்) பொருள்: வழிபாடு, நல்ல செயல்கள் - உனக்காக செய்யப்படுகின்றன, ஏனென்றால் நீ மட்டுமே வணக்கத்திற்கு தகுதியானவன்.