இங்கு நபியவர்கள் ஒரு மனிதருக்கு பாவங்களுக்காகவே தவிர, பத்துக் கசையடிகளுக்கு மேலால் அடிக்கக் கூடாது எனத் தடுக்கின்றார்கள். இங்கு, கசையடி அல்லது அடித்தல் அல்லது குறிப்பிட்ட தண்டனை என மார்க்கத்தில் வந்துள்ள தண்டனைகள் நாடப்படவில்லை. இதன் அர்த்தமாவது, மனைவி, பிள்ளைகளுக்கு அடித்தல் போன்ற ஒழுக்கமூட்டல் தண்டனைகளில் இவ்வாறு அதிகரிக்கக்கூடாது என்பதாகும்.