நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : ஓர் ஆணுடனோ, பெண்ணுடனோ பின் துவாரத்தில் உடலுறவு கொள்பவனை அல்லாஹ் பார்க்கவே மாட்டான். சரியானது - இதனை இமாம் திர்மிதியும், குப்ரா எனும் நூலில் இமாம் நஸாஈயும் பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

ஒரு பெண்ணுடனோ, ஆணுடனோ பின் துவாரத்தில் உறவு கொள்பவனை அல்லாஹ் தனது அருட்பார்வை கொண்டு பார்க்கமாட்டான் எனவும், அது ஒரு பெரும் பாவம் எனவும் கடுமையான ஓர் எச்சரிக்கையை இங்கு நபியவர்கள் விடுக்கின்றார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • ஓர் ஆண் இன்னோர் ஆணுடன் உறவுகொள்வது (ஓரினச் சேர்க்கை) பெரும்பாவமாகும்.
  • ஒரு பெண்ணுடன் பின் துவாரத்தில் உறவுகொள்வது பெரும்பாவமாகும்.
  • 'அல்லாஹ் பார்க்கமாட்டான்' என்பதன் அர்த்தம், அருட்பார்வை பார்க்கமாட்டான் என்பதுவே தவிர பொதுவான பார்வை அல்ல. ஏனெனில், அல்லாஹ்வை விட்டும் எதுவும் மறைந்துவிடாது. அவனது பார்வையை விட்டும் எதுவும் ஒழிந்து விடாது.
  • இச்செயற்கள் மிகக் கெட்ட பாவங்களாகவும், மனிதகுலத்திற்கு ஆபத்தானவையாகவும் உள்ளன. ஏனெனில், ஈடேற்றமான மனித இயல்புடன் முரண்படல், இனப்பெருக்கம் குறைவடைதல், குடும்ப வாழ்க்கை சீர்குலைதல், குரோதம் மற்றும் விரோதம் விதைக்கப்படல், அருவருப்பான இடத்தில் உறவுகொள்ளல் போன்ற தீங்குகள் இதில் உள்ளன.
explain-icon

பிரிவுகள்

explain-icon

மேலதிக விபரங்களுக்கு