அல்லாஹ்வின் வார்த்தையே உயர்ந்ததாக இருக்கும் நோக்கில், இயன்றளவு எல்லா வழிகளையும் பயன்படுத்தி, நிராகரிப்பாளர்களை எதிர்த்துப் போரிடுமாறு அல்லாஹ் தனது நபிக்கு ஏவுகின்றான். பின்வருவன அவற்றில் உள்ளவையாகும் : 1. அவர்களுக்கெதிராக யுத்தம் செய்வதற்காக ஆயுதங்கள் வாங்குதல், போராளிகளுக்கு செலவழித்தல் போன்ற அமைப்பில் பணம் செலவழித்தல். 2. அவர்களுடன் நேரடியாகப் போரிட உடல் மற்றும் உயிரைக் கொண்டு வெளியேறல். 3.அவர்களை நாவினால் இம்மார்க்கத்தை நோக்கி அழைத்தல், அவர்களிடம் ஆதாரங்களை முன்வைத்தல், அவர்களைக் கண்டித்தல் அவர்களுக்கு மறுப்பளித்தல்.