அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கலந்து கொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள். சரியானது - இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கலந்து கொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பெண்களையும்,பருவ வயதை அடையாத குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • போரில் பங்கேற்காத பெண்கள் மற்றும் குழந்தைகள், அதே போல் அதே சூழ்நிலையில் உள்ள முதியவர்கள் மற்றும் துறவிகள் (ஆசிரமங்களில் வசிப்பவர்கள்) போர்களில் கொல்லப் படக்கூடாது. ஆனால் அவர்கள் போர் திட்டமிடுபவர்களாகவோ அல்லது முஸ்லிம்களுக்கு எதிரான போரில் உதவியாளர்களாகவோ இருந்தால், அவர்கள் கொல்லப்படலாம்.
  • போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் அவர்கள் போரில் பங்கேற்பாளர்கள் அல்லர். அல்லாஹ்வின் பாதையில் போர் மற்றும் ஜிஹாத் செய்வதன் நோக்கம்;, இஸ்லாத்திற்கு எதிராகப் போராடுபவர்களின் பலத்தை குன்றச் செய்து, அதன் மூலம் சத்திய மார்க்கம் இஸ்லாத்தின் செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்வதாகும்.
  • போர்கள் மற்றும் மோதல்களின் போது கூட நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கடைப்பிடித்த கருணையின் வெளிப்பாட்டை இந்த ஹதீஸ் குறிப்பிடுகின்றமை.
explain-icon

பிரிவுகள்

explain-icon

மேலதிக விபரங்களுக்கு