உணவை உண்ணும் ஒருவர் அல்லாஹ்வை புகழவேண்டும் என நபியவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஏனெனில் அல்லாஹ்வின் உதவியின்றி அந்த உணவை பெற்றுக்கொள்வதற்கோ அதனை சாப்பிடுவதற்கான சக்தியோ தனக்குக் கிடையாது என்று தனது இயலாமையை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வை முழுமையாக புகழ்வதை இது குறிக்கிறது. இந்தப்பிரார்த்தனையை கூறுபவருக்கு அவர் முன்செய்த சிறிய பாவங்களுக்கான இறைமன்னிப்புக் கிடைக்கும் அதற்கு அவர் தகுதிபெறுகிறார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நற்;செய்தி கூறுகிறார்கள்.