நபி முஹம்மத் (ஸல்) அவர்கள், ஸஜ்தாவில் இருக்கும் போது இவ்வாறு துஆ செய்தார்கள்: யா அல்லாஹ்! என் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக' அதாவது, யாஅல்லாஹ் என் பாவங்களை மூடி மறைப்பாயாக, அவற்றின் விளைவுகளிலிருந்து என்னைக் பாதுகாத்து, முழுமையாக மன்னித்து, பரிசுத்தப்படுத்துமாறு வேண்டுகிறேன், சிறிய பாவங்களையும், பெரிய பாவங்களையும், முதல் செய்த பாவத்தையும், இறுதியாக செய்த பாவத்தையும், அவற்றுக்கு நடுவிலுள்ள அனைத்தையும், வெளிப்படையாக செய்த பாவங்களையும், ரகசியமாக செய்த பாவங்களையும் (அல்லாஹ் மட்டுமே அறிந்த பாவங்களையும்) மன்னிக்குமாறும் வேண்டுகிறேன்.