பேணுதல் என்ற அடிப்படையில் ரமழானுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு நோன்பு நோற்பதைத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள். காரணம் ரமழான் நோன்பின் பிறைபார்ப்பதுடன் தொடர் பட்டுள்ளது. இதில் வருத்திக்கொள்ளவோ கஷ்டப் படுத்திக் கொள்ளவோ தேவையில்லை. இருப்பினும், யாராவது ஒருவர், ஒரு நாள் நோன்பு நோற்று மற்றொரு நாள் நோன்பு நோற்காமல் இருப்பது அல்லது திங்கள் அல்லது வியாழக் கிழமைகளில் நோன்பு நோற்பது போன்ற வழமையைக் கொண்டிருந்தால், வழக்கமான நாள் ரமழானுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தால், அவர் அந்த நாளில் நோன்பு நோற்கலாம். ஏனெனில் இது ரமழானை வரவேற்பதாக அமையாது. இதேபோல், தவறவிட்ட (கழா நோன்பு மற்றும் நேர்ச்சை நோன்புகள் போன்ற கட்டாய நோன்புகளையும் ரமழானுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு நோற்கலாம்.