ரஸூல் (ஸல்) அவர்கள் தர்மத்தின் சிறப்பை எடுத்துக் கூறி,மனிதர்களிடம் யாசிப்பதை இழிந்துரைத்தார்கள். மேலும் மற்றவர்களிடம் பொருள் தேடி யாசிப்பவனை விடவும் தன் செல்வத்தை தர்மம் செய்யும், அதனை நல் வழியில் செலவு செய்யும் மனிதனே சிறந்தவன் என்றும் அறிவுறுத்தினார்கள்.