தான் முன்னெடுக்கவிருக்கும் ஒரு விடயத்தை விட்டும் யாரை தீய சகுனம் தடுக்கின்றதோ அவர் இணைவைப்பின் ஒரு வகையைச் செய்து விட்டார். இப்பாரிய பாவத்திற்கான பரிகாரம் என்னவென நபித்தோழர்கள் வினவிய போது அல்லாஹ்விடம் முழுப் பொறுப்பையும் சாட்டக்கூடிய, அவனுக்கு மாத்திரம்தான் சக்தியுள்ளது என்பதை உறுதிப்படுத்தக் கூடிய மேற்கண்ட வார்த்தையை மொழியுமாறு கூறினார்கள்.