நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வை நினைவுகூர்பவனுக்கும், நினைவுகூறாதவனுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்தும் போது, உயிருள்ளவனுக்கும் உயிரற்றவனுக்கும் இடையில், பயனிலும், அழகிய வெளித் தோற்றத்திலும் உள்ள வேறுபாட்டைப் போல என்று அடையாளப்படுத்துகின்றார்கள். தனது ரப்பை நினைவுகூர்பவன் வெளித்தோற்றம் வாழ்க்கை எனும் ஒளியாலும், உள்ளம் அறிவு ஞானம் எனும் ஒளியாலும் அலங்கரிக்கப்பட்டவனைப் போல. அவனில் பலன்கள் உள்ளது. அல்லாஹ்வை நினைவுகூறாதவன், வெளியில் செயலற்றவனாகவும், உள்ளத்தில் ஒன்றுமில்லாதவனாகவும் இருக்கும் மரணித்த பிணத்தைப் போல. அவனில் எப்பயனும் இல்லை. வீடுகளும் இவ்வாறுத்தான். அங்கு வசிப்பவர்கள் அல்லாஹ்வை நினைவுகூர்பவர்களாக இருந்தால், உயிருள்ள வீடு எனப்படும். அவ்வாறில்லா விட்டால், அங்கிருப்பவர்கள் அல்லாஹ்வை நினைவுகூறாத காரணத்தினால், இறந்த வீடு எனப்படும். வீடு, உயிருள்ளது, உயிரற்றது எனக் கூறப்பட்டுள்ளதன் மூலம் நாடப்படுவது அதில் வசிப்பவர்களே!.