ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை சந்திக்கும் போதெல்லாம் ஸலாம் கூறுமாறு நபியவர்கள் வலியுறுத்துகின்றார்கள். எந்தளவுக்கென்றால், அவர் ஒன்றாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கிடையில் மரம், அல்லது சுவர் அல்லது பெரிய கல் போன்ற ஏதாவதொன்று பிரித்து, பின்னர் சந்தித்தாலும் மீண்டுமொரு தடவை ஸலாம் சொல்லட்டும் என்று கூறுகின்றார்கள்.