சூரியன் மறைந்துவிட்டது என்பது உறுதியானதன் பின், மக்கள் தங்கள் நோன்பைத் துறக்க தாமதிக்காது விரைந்து செல்லும் காலமெல்லாம், அவர்கள் நலவில் இருப்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். ஏனெனில், இது நபி (ஸல்) அவர்களின் சுன்னாவைப் பின்பற்றி, அவர் நிர்ணயித்த வரம்புகளை மீறாமல் இருப்பதற்கான வழிகாட்டலாகும்.