நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, உம்முல் முஃமினீன் ஆஇஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஒரு தீனாரின் கால்வாசி அல்லது அதைவிட அதிகான அளவில் கை வெட்டப்படும். சரியானது - இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

இங்கு நபியவர்கள், ஒரு திருடன் ஒரு தீனாரின் கால்வாசி அளவோ, அதற்கு மேற்பட்ட அளவோ திருடினால் அவனது கை வெட்டப்படும் எனத் தெளிவுபடுத்துகின்றார்கள். அது, 1.06 கிராம் தங்கத்துக்கு நிகரான பெறுமதியைக் கொண்டதாகும்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • திருட்டு பெரும்பாவங்களில் ஒன்றாகும்.
  • திருடனுக்கான தண்டனையை அல்லாஹ் வரையறுத்துள்ளான். அதாவது அவனது கை வெட்டப்படவேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்: 'திருடும் ஆணின் மற்றும் பெண்ணின் கைகளை வெட்டுங்கள் (அல் மாஇதா : 38) நபியவர்களின் ஸுன்னா, வெட்டுவதற்கான நிபந்தனைகளை தெளிவுபடுத்தியுள்ளது.
  • இந்த ஹதீஸில் 'கை' என்பதன் மூலம் நாடப்படுவது, மணிக்கட்டை, கையின் ஏனைய பகுதிகளில் இருந்து பிரிக்கும் மூட்டில் இருந்து வெட்டுவதாகும்.
  • மக்களது சொத்துக்களைப் பாதுகாத்தல், அத்துமீற நினைக்கும் ஏனையோரை எச்சரித்தல் என்பன, திருடனின் கையை வெட்டுவதில் உள்ள சில மதிநுட்பங்களாகும்.
  • தீனார் என்பது, தங்கத்தில் ஒரு மிஸ்கால் அளவாகும். தற்போதைய அளவின் படி, 24 கரட் தங்கத்தில் 4.25 கிராமுக்கு சமமாக உள்ளது. எனவே, ஒரு தீனாரில் நான்கில் ஒன்று என்பது, ஒரு கிராமை விட சற்று அதிகமாக இருக்கும்.
explain-icon

பிரிவுகள்

explain-icon

மேலதிக விபரங்களுக்கு