குறித்த அந்த இடங்கள் இணைவைப்பாளர்களுக்கு சொந்தமான சந்தைகளாக இருந்தன.அவைகளில் ஹஜ்ஜுடைய நாட்களில் வியாபாரம் செய்யக் கூடியவர்களாக இருந்தனர்.ஆகவே அவ்விடங்களில் ஹஜ்ஜுடைய நாட்களில்வியாபாரம் செய்வதினால் பாவம் ஏற்படும் என ஸஹாபாக்கள் பயந்தனர்.இதனால் அல்லாஹ் இவ்வசனத்தை இறக்கி ஹஜ்ஜுடைய நாட்களில் ஹஜ்ஜின் கிரியைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதுடன் வியாபாரம் செய்வது ஹஜ்ஜின் கிரியைகளில் எவ்விதப்பாதிப்பையும் ஏற்படுத்தாது என அவர்களுக்கு தெளிவு படுத்தினான்.அத்துடன் வியாபாரம் செய்வது அனுமதிக்கப்பட்டது என்றாலும் ஹஜ் கிரியைகளில் முழுமையாக ஈடுபடுவதுதான் மிகவும் ஏற்றமானதும் சிறந்த விடயமுமாகும்