நபி (ஸல்) அவர்கள் பல்லக்கில்லாத ஒட்டகத்தின் மீது ஹஜ்ஜுக்குச் சென்றார்கள்.அத்துடன் அவரின் உணவையும்,பொருட்களையும் சுமந்து செல்வதற்கான வேறு ஒட்டகம் நபி (ஸல்) அவர்களுக்கு இருக்கவில்லை. அவைகளை தான் பிரயாணம் செய்த ஒட்டகத்திலேயே வைத்துக் கொண்டார்கள். இச்செயல் நபியவர்களின் எளிமையையும், உலகத்தில் அவரின் குறைவான ஈடுபாட்டையும் காட்டுகிறது. மாறாக இந்த ஹதீஸ் ஹஜ்ஜின் போது சொகுசான, ஆடம்பரமான வாகனங்களில் சவாரி செய்தல் ஹராம் என்பதைக் காட்டாது. ஹஜ்ஜின் போது சொகுசையும் ஆடம்பரத்தையும் குறைத்துக் கொள்வதே நபியவர்களை ஹஜ்ஜின் போது பின்பற்றுவதில் மிகச்சிறந்த விடயமாகும் என்பதை காட்டும்.