எவ்வித ஆதாரமோ, தகுந்த சாட்சியங்களோ இல்லாது தங்களது வாதத்தின் அடிப்படையில் வழக்காடும் ஒருவருக்கு அவரால் கோரப்படுபவை வழங்கப்படும் என்றிருந்தால் சிலர் மக்களின் உடமைகளையும், அவர்களின் உயிரையும் கூட உரிமை கோரத் தொடங்குவார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். ஆகவே, வாதி தனது கூற்றுக்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். அவரிடம் ஆதாரம் இல்லையென்றால், அந்தக் கோரிக்கை பிரதிவாதியின் முன் வைக்கப்படும். அவர் மறுத்தால், அவர் சத்தியம் செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு அவர் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்படுவார்.