இங்கு நபியவர்கள் கூறுவதாவது, இஸ்லாம் சில தனிநபர்கள் மாத்திரம் இருக்க, ஏற்றுக் கொண்டவர்கள் குறைவாக இருக்கும் நிலையில் ஆதரவற்ற ஒன்றாகவே ஆரம்பித்தது. அவ்வாறு ஆரம்பித்தது போன்றே, நடைமுறைப் படுத்துபவர்கள் குறைவடைந்து, ஆதரவற்ற நிலைக்கே அது மீண்டும் செல்லும். ஆதரவற்ற நிலையிலும் அதை நடைமுறைப்படுத்தும் 'குரபா'க்களுக்கு சுபசோபனமும், மகிழ்ச்சியும், கண்குளிர்ச்சியும் உண்டாகட்டும்.