ஹதீல் விளக்கம்:அல்லாஹ் ஏதேனும் ஒரு சமூகத்தினர் மீது அருள் புரிய நாடினால் அவர்கள் எஞ்சியிருக்க அவர்களின் நபியின் உயிரை அவன் கைப்பற்றிக் கொள்வான்.பின்னர் சுவர்க்கத்தில் அவர்களை வரவேற்கின்றவராகவும்,அவர்களுக்காக சிபாரிசு செய்கின்றவராகவும் அவர் இருப்பார்.الفرط என்பதன் பொருள் பின்னர் வருகை தர இருப்பவர்களின் வருகையை முன்னிட்டு தேவையான ஒழுங்குகளைச் செய்பவர் என்பதாகும்.பின்னர் தனக்குப் பின்னால் இருப்பவருக்கு சிபாரிசு செய்கின்றவர் என்ற கருத்தில் இது பயன் படுத்தப்படலாயிற்று.பிரிதொரு ஹதீலில் "أنا فرطكم على الحوض" "நீர் தடாகத்தில் உங்களுக்கு முன்னர் நான் இருப்பேன்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என்று பதிவாகியுள்ளது.அதாவது உங்களுக்குத் தன்னீர் எடுத்துத் தருவதற்காக உங்களுக்கு முன்னர் நான் அங்கு இருப்பேன்,என்பதாகும்