நபிமார்களைச் சேர்ந்த ஒரு நபியை அவரின் சமூகத்தைச் சேர்ந்வர்கள் அடித்தனர்.அப்போது தன் முகத்தில் வடிந்த இரத்தத்தைத் துடைத்துக் கொள்ளும் வேளையில் அவர் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்.இது அவரின் பொறுமையின் எல்லையை எடுத்துக்காட்டுகின்றது.மேலும் அவர் அத்துடன் நின்று கொள்ளவில்லை.மாறாக அவர்களின் மீது அவர் மிகவும் இரக்கப்பட்டு அவர்கள் உண்மையயை அறியாதவர்கள்,என்று அவர்களின் மீது நியாமமும் கண்டார். இந்த சம்பவத்தை நமது நபிகளார் (ஸல்) அவர்கள் நம்மிடம் எடுத்துக்கூறினார்கள்