உள்ளங்களை அரவணைத்துச் செல்லும்படியும், சபையில் ஒழுங்காக இருந்து கொள்ளும்படியும்,நல்ல முறையில் உரையாடும்படியும் இஸ்லாம் மார்க்கம் பணிக்கின்றது. மேலும் சக முஸ்லிமுக்கு தீமை விளைவிக்கின்ற,அவனை அச்சுறுத்துகின்ற,அவனுக்கு சந்தேககங்களை உண்டு பண்ணுகின்ற சகல காரியங்களையும் அது தடை செய்கிறது.இப்படியான காரியங்களில் ஒன்றுதான் மூன்று பேர்கள் ஒன்றாக இருக்கும் வேளையில் ஒருவரைத் தவிர்த்து இரண்டு பேர்கள் தனியாகப் பேசிக் கொண்டு செல்வதாகும்.ஏனெனில் இது அவருக்கு தீமையை உண்டு பண்ணும்,அவருக்குக் கவலையைத் தரும்.மேலும் அவர் அவ்விருவருடன் இருக்கத் தகுதியற்றவரோ என்று அவருக்குத் தோன்றச் செய்யும்.அத்துடன் அது அவருக்கு தனிமையையும் உணர்த்தும்.எனவேதான் இத்தகைய இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை மார்க்கம் தடை செய்துள்ளது.