முஸ்லிம்களின் நிலமைகளை உளவு பார்த்து அவர்களின் குறைகளை தேடி யாரும் அறியாதிருந்த அவர்களின் இழிவான அருவருக்கத்தக்க விடயங்களை துருவி ஆராய்ந்து அவற்றை பகிரங்கப்படுத்துவது கூடாத செயலாகும். அவ்வாறு நீ செய்வதன் மூலம் அவர்களின் வெட்கம் குறைவடைந்து அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியாதிருந்த அந்தப்பாவங்களை அவர்கள் பகிரங்கமாக துணிவுடன் செய்வதற்கு அது வழிவகுக்கும்.