இரவின் கடைசி மூன்றில் ஒரு பகுதியில் இறைவன் தன் அடியானுக்கு மிக அருகில் வருவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். முஃமினே ! - இந்த நேரத்தில் அல்லாஹ்வைத் தொழுது அவனை நினைவு கூறி அவனிடம் பாவமன்னிப்புத் கோருபவர்களில் ஒருவராக உமக்கு இருக்க முடியுமென்றிருந்தால் அதற்கு எத்தனிப்பீராக. ஏனெனில் இந்நேரத்தை பயன்படுத்தி அதில் நல்லமல்களில் ஈடுபடுவது மிகவும் தேவையான ஒரு விடயமாகும்.