ஆயிஷா (ரழி) அவர்களை ஒரு பெண் சந்தித்து அவர்களிடம் தான் செய்யும் அதிமான வணக்கங்கள் குறித்தும்,தொழுகை குறித்தும் பிரஸ்தாபித்தாள். இதனை ஆயிஷா (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் கூற நபி ஸல் அவர்கள் வணக்கத்தில் எல்லைமீறி ஈடுபடுவதை விட்டும், தனது சக்திக்கு அப்பாற்பட்டு வருத்திக்கொண்டு செய்வதை விட்டும் அப்பெண்மணியைத் தடுத்தார்கள். அது மட்டுமல்லாமல் அல்லாஹ் நீங்கள் வணக்கங்கள் செய்து சலிப்புற்று அதனை விட்டுவிடுமளவுக்கு உங்களுடன் உறவாடுவதில்லை, எனவும் அதனால் அல்லாஹ்வின் அருளும், கூலியும் தொடர்ந்து கிடைப்பதற்கு உங்களால் முடிந்ததை தொடர்ந்து செய்வதுதான் வழியாகும் எனவும் தெரிவித்தார்கள்.