ஹதீஸ் விளக்கம்:ஒரு ஒட்டகம் கடும் பசியின் காரணமாக அதன் முதுகு அதன் வயிற்றுடன் ஒட்டிப் போயிருந்தது. அதனைக் கண்ட ரஸூல் (ஸல் அவர்கள் கால்நடைகளுக்கு இரக்கம் காட்டும்படி உத்தரவிட்டார்கள்.மேலும் அதனுடன் நல்ல முறையில் நடந்து கொள்வது மனிதனின் கடமை என்றும்,எனவே அதன் சக்திக்கு அப்பால் அதற்கு சிரமம் கொடுக்கவும்,அதன் உணவு,குடிப்பு போன்ற அதன் உரிமையில் குறைபாடு செய்யவும் கூடாது என்றார்கள். மேலும் அதன் மீது சவாரி செய்வதாக இருந்தால் அது நல்ல நிலையில் இருக்கும் போதே அதன் மீது சவாரி செய்ய வேண்டு மென்றும்,அதனை உண்ணுவதென்றால் அது உணவுக்குப் பொருத்தமான நிலையில் இருக்கும் போதே அதனைச் சாப்பிட வேண்டும் என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.