இந்த ஹதீஸில் பொறுப்பின் முக்கியத்துவம் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. ஏனெனில் நபி (ஸல்)அவர்கள் மக்கள் விவகாரங்களை பொறுப்பேற்றவர், மக்களுடன் கடுமையாக நடந்து கொண்டால் அல்லாஹ்வும் அவருடன் அதே போல் நடந்து கொள்ள வேண்டும் எனவும், நீதி, நேர்மை,கருணை,மென்மை போன்ற பண்புகளுடன் நடந்து கொள்பருக்கு நற்கூலி வழங்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறார்கள். ஆகையால் செயலின் தன்மைக்கு ஏற்பவே கூலியும் கிடைககிறது.