இந்த ஹதிஸில் இறை தூதரின் வழிகாட்டள்கள் பல காணப்படுகின்றன. அவைகளில் ஒன்று முஸ்லிமை பொருத்த வரை ஒருவரை புகழ்வதில்,பாராட்டுவதில் எல்லை மீறி செயற்படுவதிலிருந்து தூர விலகியிருக்க வேண்டும். பிரமை மற்றும் தற்பெருமை ஷைத்தான் நுழைவாயில்களாகும், அவ்வாறு புகழ்வது புகழப்பட்டவரை பெருமையிலும்,பிரமையிலும் மூழ்கடித்து அவரை அழித்து விடும். எனவே ஒரு முஸ்லிம் பிறரைப் பாராட்டுவதிலும் புகழ்வதிலும் நடு நிலமையைக் கடைப்பிடித்து மனிதர்களின் மறைவான விடயங்களை அல்லாஹ்விடமே பொறுப்புச்சாட்டிட வேண்டும்.