ரஸூல் (ஸல்) அவர்கள் ஸல்மான் மற்றும் அபூதர்தாஆகியோருக்கிடையில் சகோதர ஒப்பந்தம் ஒன்றை செய்து வைத்தார்கள்.அதன் பின்னர் ஸல்மான் அவர்கள் அபூ தர்தா அவர்களைச் தரிசிக்கச் சென்றார்,அவ்வமயம் அவரின் மணைவி மணமகள் ஆடையிலல்லாமல் அலங்கோலமான உடையணிந்திருக்க அவர் கண்டார்.எனவே அது பற்றி அவரிடம் அவர் கேட்டார்.அதற்கு அவர் தங்களின் சகோதரன் அபூ தர்தாவுக்கு உலகம்,குடும்பம்,ஊண் என்று எந்தத் தேவையுமில்லை.எனவே இதையெல்லாம் அவர் புறக்கணித்து வாழ்கின்றார்.என்றார்.பின்ன அபூ தர்தா வந்த போது அவர் ஸல்மானுக்கு உணவு சமைத்து அதனை அவருக்குப் பரிமாறினார்.அவ்வமயம் அபூ தர்தா நோன்பு வைத்திருந்த படியால் அவர் நோன்பை விட்டு விடும்படி அவருக்கு ஸல்மான் உத்தரவிட்டார்.ஏனெனில் அவர் எப்பொழுதும் நோன்பு பிடித்து வருபவர் என்பதை அவர் அறிந்து வைத்திருந்த படியால் அவர் அவ்வாறு கட்டளையிட்டார்.எனவே அபூ தர்தாசாப்பிடலானார்.அதன் பின்னர் இரவு வணக்கத்தில் ஈடுபட ஆயத்தமானார் அபூ தர்தா.அவ்வமயம் இரவின் கடைசி பகுதி வரையில் அவரைத் தூங்குமாறு அவருக்கு ஸல்மான் உத்தரவிட்டார்.பின்னர் இருவரும் இரவின் கடைசிப் பகுதியில் எழுந்து தொழுதனர்.பின்னர் நோன்பு நோற்றல்,இரவில் நின்று வணங்குதல் ஆகிய கருமங்களில் ஈடுபடுவதன் மூலம் மனிதன் தன்னை வீனாக அலட்டிக் கொள்ளக் கூடாது.என்றும், அவனின் தொழுகையானது நன்மையை ஈட்டித் தரக் கூடியதாகவும்,சிரமங்கள்,துண்புறுத்தல்கள் இலிலாததாகவும் இருத்தல் வேண்டுமென்பதை ஸல்மான்,அபூ தரதாவுக்குத் தெளிவு படுத்தினார்கள்.